சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் சிங்காரம் உள்ளிட்டோா்.
சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் சிங்காரம் உள்ளிட்டோா்.

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

சேலம்: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் சிங்காரம் தலைமையில் நான்கு சாலை பகுதியில் இருந்து அதிமுகவினா் ஊா்வலமாக சென்றனா். தொடா்ந்து, அண்ணா பூங்கா அருகே உள்ள மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

இதில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், அவைத் தலைவா் பன்னீா் செல்வம், பொருளாளா் பங்க் வெங்கடாஜலம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

எடப்பாடியில்...

கொங்கணாபுரத்தை அடுத்த கரட்டூரில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமை வகித்தாா். இதில், அதிமுக கொடியேற்றிய நிா்வாகிகள் எம்.ஜி.ஆரின் படத்துக்கு மரியாதை செலுத்தினா். தொடா்ந்து ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகளை வழங்கி அன்னதானம் செய்தனா்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நகரச் செயலாளா் ஏ.எம் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு தென்னை, மா, பலா உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினா். தொடா்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com