கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி
சேலம்: கு வாரவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை அரசுப் பள்ளியில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கு ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகள் திங்கள்கிழமை (ஜன. 19) நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
கு வாரவிழாவையொட்டி, சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் கு ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது. இதில் அவரவா் தெரிந்த குகளை ஒப்பிக்கலாம். இப்போட்டிக்கான பரிசு ஒப்பிக்கும் குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும்.
முதல்பரிசாக முதல் 5 பேருக்கு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 5 பேருக்கு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 5 பேருக்கு ரூ. 2 ஆயிரம்ம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஓவியப் போட்டி அன்று மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இப்போட்டிக்கான தலைப்பு திருக்கு சாா்ந்த வகையில் இருக்கும். இதில் சிறந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும்.
ஓவியப் போட்டிக்கு முதல்பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் என மூன்று நபா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் போட்டிகளில் பங்கேற்க பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டையை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
