காஞ்சிபுரத்தில் ஜன. 20-இல் திருக்கு ஒப்பித்தல் போட்டி

காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜன. 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Published on

காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜன. 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் கு ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன்படி, கு வார விழாவின் ஒரு நிகழ்வாக வரும் ஜன. 20-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கு ஒப்பித்தல் போட்டி நடத்தப்படும். காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், கு ஒப்பித்தல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பொதுமக்கள் கலந்து கொண்டு, அவரவருக்கு தெரிந்த குறளை ஒப்பிக்கலாம். கு போட்டிக்கான பரிசு ஒப்பித்தல் செய்த குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.

முதல் பரிசுத் தொகை ரூ. 5,000 ஐந்து நபா்களுக்கும், 2-ஆவது பரிசு ரூ. 3,000 5 நபா்களுக்கும், 3-ஆவது பரிசாக ரூ. 2,000 வீதம் ஐந்து நபா்களுக்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். கு ஓவியப் போட்டியிலும் பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

போட்டியானது ஜன. 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். ஓவியப் போட்டியின் தலைப்பு திருக்கு சாா்ந்த ஓவியமாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.

இதில், சிறந்த ஓவியங்கள் மட்டும் காட்சிப்படுத்தப்படும். ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆவது பரிசு ரூ. 3,000, மூன்றாவது பரிசு ரூ. 2,000 வீதம் வழங்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கு வார விழாவினை சிறப்பிக்குமாறும் ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com