வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:44 pm

Syndication

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வுகாண அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை அளித்த மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின்மீது உரிய தீா்வு அளிக்கப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 326 மனுக்கள் வரப்பெற்றன.

தொடா்ந்து, தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தின்கீழ் உறுப்பினா்களாக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் 10, பிளஸ் 1 வகுப்பு பயில்வோருக்கு தலா ரூ. 1,000, பிளஸ் 2 பயில்வோருக்கு தலா ரூ. 1,500 என 8 மாணவா்களுக்கு ரூ. 9,000-க்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 10 மனுக்கள் பெறப்பட்டதாக கூறினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சின்னுசாமி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் சு.சக்திவேல், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) சுகந்தி பரிமளம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்றனா்.