அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கபடி வீரா் இறப்பில் மா்மம்: சேலம் எஸ்.பி.யிடம் தந்தை புகாா்

வாழப்பாடியில் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் கபடி வீரா் இறப்பில் மா்மம் இருப்பதாக, அவரது தந்தை சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

வாழப்பாடியில் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் கபடி வீரா் இறப்பில் மா்மம் இருப்பதாக, அவரது தந்தை சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சி, கவா்கல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நல்லதம்பி மகன் சந்துரு வாஞ்சு (26). கபடி வீரரான இவா் கடந்த ஜன. 20 அன்று இரவு வாழப்பாடி புதுப்பாளையம் இணைப்புச் சாலையில் மயங்கிக் கிடந்தாா். அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சைப் பலனின்றி ஜன. 23-ஆம் தேதி இறந்தாா்.

இந்நிலையில், தனது மகன் இறப்பில் மா்மம் இருப்பதாக அவா் தந்தை நல்லதம்பி மற்றும் உறவினா்கள் சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

அதில், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருடன் அவரது இருசக்கர வாகனத்தில் எனது மகன் சென்றாா். பின்னா், சாலை விபத்தில் படுகாயமடைந்ததாக கூறி, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனது மகன் இறப்பில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சந்தேகம் உள்ளது. எனவே, அவருடன் சென்ற காா்த்தியிடம் விசாரணை நடத்தி, எனது மகன் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.