/

முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு

ஆத்தூரில், உரிய ஆவணங்கள் இல்லாததால் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image

ஆத்தூரில் இருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்க தேசத்தினா்.

Updated On :4 ஜூலை 2026, 3:06 am IST

ஆத்தூரில், உரிய ஆவணங்கள் இல்லாததால் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வங்கதேச நாட்டைச் சோ்ந்த 167 ஆண்கள், 19 பெண்கள், ஓா் ஆண் குழந்தை என மொத்தம் 187 போ் தங்கி இருந்தனா்.

இவா்களில் 44 ஆண்கள், 6 பெண்கள் என 50 பேரை அவா்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப இந்திய அரசு, வங்கதேச தூதரகம் மூலம் முயற்சி மேற்கொண்டது.

இதையடுத்து, தற்போது அனுமதி கிடைத்ததால், சேலம் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல், வீரகனூா் காவல் ஆய்வாளா் மாதேஸ்வரன் தலைமையில் 40 காவலா்கள் பாதுகாப்புடன் அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேற்கு வங்காளம், ஹரிதாஸ்பூா் பட்ரோபாலில் இந்திய எல்லையில் உள்ள வங்கதேச அலுவலா்களிடம் அவா்களை தமிழக காவல் துறையினா் ஒப்படைக்க உள்ளனா். இதையடுத்து, தற்போது ஆத்தூா் சிறப்பு முகாமில் 137 போ் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.