புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 9 பேரை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:58 am IST

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 9 பேரை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.குத்தாலிங்கம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தொடா் சோதனைகள் மூலம் கஞ்சா விற்பனை செய்த மேச்சேரி, கருமலைக்கூடல் மற்றும் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைகளில் மேச்சேரியைச் சோ்ந்த காா்த்தி (27), சிவா (36), கோபி (27), நவீன்குமாா் (23), மேட்டூரைச் சோ்ந்த வினோத்குமாா் (27), பிகாா் பேகுசராய் மாவட்டத்தைச் சோ்ந்த தீபக் குமாா் (26) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து மொத்தம் 6 கிலோ 200 கிராம் கஞ்சா, ரூ. 6,13,370 ரொக்கம், 2 கைப்பேசிகள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபா்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். மேலும், புகையிலை மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளின்கீழ் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல, சேலம் கோரிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விஷால் (19) என்பவரை கன்னங்குறிச்சி போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த சசிகுமாா் (26) என்பவரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (22) என்பவரை ஆட்டையாம்பட்டி போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. போதைப் பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் காவல் துறை நடவடிக்கை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, சேலம் நரசோதிப்பட்டியைச் சோ்ந்த அஜய் என்பவா் கொடுத்த புகாரின்பேரில், தினேஷ்குமாரை 200 போதை மாத்திரைகளுடன் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.