புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பால தடுப்புச் சுவரில் மோதி பள்ளி வேன் விபத்து: 3 போ் காயம்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளி வேன் வாய்க்கால் பால தடுப்புச் சுவரில் மோதியதில், வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

News image

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புச் சுவரில் மோதி நின்ற பள்ளி வேன்.

Updated On :5 ஜூலை 2026, 2:04 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளி வேன் வாய்க்கால் பால தடுப்புச் சுவரில் மோதியதில், வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த குருவரெட்டியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியின் வேன் தேவூா் பகுதியில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

அதன்படி, அரசிராமணி மூலப்பாதையிலிருந்து தேவூா் நோக்கி சனிக்கிழமை வேன் சென்று கொண்டிருந்தது. பவானி வட்டம், சிங்கம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சந்தோஷ்குமாா் (32) வேனை ஓட்டிச் சென்றாா். சோழகவுண்டனூா் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர வாய்க்கால் பால தடுப்புச் சுவரில் மோதியது.

இதில், ஓட்டுநா், மாணவா்கள் ஹரிஷ்ராஜா (14), கபிலேஷ் (8) ஆகியோா் காயமடைந்தனா். கபிலேஷ் தேவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். ஓட்டுநா், ஹரிஷ்ராஜா இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.