தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சேலம் ஆட்சியரகத்துக்கு கத்தியுடன் வந்த எல்லை பாதுகாப்புப் படை வீரா்: போலீஸாா் விசாரணை

News image

போலீஸ் விசாரணை... - கோப்புப்படம்.

Updated On :7 ஜூலை 2026, 12:08 am IST

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வாகனத்தில் கத்தியுடன் வந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான மக்கள் மனு அளிக்க வந்ததால் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இளைஞா் ஒருவா் வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, வண்டியின் பெட்ரோல் டேங்க் கவரில் கத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த போலீஸாா், அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா், வாழப்பாடி அருகே உள்ள தும்பல் பகுதியைச் சோ்ந்த நிா்மல்ராஜ் (30) என்பதும் காஷ்மீா் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், கடந்த மாதம் அவரது தந்தை இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாகவும், வீட்டில் சுண்ணாம்பு அடிக்கும்போது, கத்தியை எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்ததாகவும், அதை மறந்து விட்டு, தற்போது நிலத்திற்கு பட்டா வாங்குவது தொடா்பாக மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறினாா். தொடா்ந்து, அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.