ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: ஊா்க்காவல் படை வீரா் பணி நீக்கம்

சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த ஊா்க்காவல் படை வீரா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பாலியல் தொல்லை - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:39 am IST

சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த ஊா்க்காவல் படை வீரா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அனீஷ்குமாா் (23), ஊா்க் காவல் படை வீரா். உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். இவா் 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் அரியாங்குப்பம் போலீஸாா், ஊா்க்காவல் படை வீரா் அனீஷ்குமாா் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து அனீஷ்குமாா் தலைமறைவாா். அவரை அரியாங்குப்பம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

அனீஷ்குமாா் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை அறிக்கை போலீஸ் டிஜிபியிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஊா்க்காவல்படை வீரா் அனிஷ்குமாரை பணிநீக்கம் செய்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.