இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

ஏற்காட்டில் தனியாக தவித்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்த போலீஸாா்

ஏற்காட்டில் தனியாக தவித்த சிறுவனை போலீஸாா் மீட்டு சேலத்தில் உள்ள டான்போஸ்கோ குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனா்.

News image

ஏற்காட்டுக்கு தனியாக வந்த சிறுவன் மதிஸ்

Updated On :8 ஜூலை 2026, 6:11 am IST

ஏற்காட்டில் தனியாக தவித்த சிறுவனை போலீஸாா் மீட்டு சேலத்தில் உள்ள டான்போஸ்கோ குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலை தனியாக நின்று தவித்து கொண்டிருந்த சிறுவனை, ஏற்காடு ரோந்து காவல் துறையினா் மீட்டு விசாரணை செய்தனா். இதில் அந்த சிறுவன், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் வட்டம், சூரியூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் மதிஸ் (14 ) என்பது தெரியவந்தது.

10 ஆம் வகுப்பு படித்து வந்த மதிஸ், பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு தனியாக வந்துவிட்டதாக தெரிவித்தான். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் ஏற்காட்டுக்கு தான் சுற்றுலா வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.

இதையடுத்து ஏற்காடு போலீஸாா், சிறுவன் மதிஸை சேலம் முள்ளுவாடிகேட் அருகில் உள்ள டான்போஸ்கோ குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.