சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மெரீனாவில் கடல் அலையில் சிக்கி சிறுவன் மாயம்: போலீஸ் விசாரணை

சென்னை மெரீனா கடற்கரையில் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த 9 வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மெரீனா - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 5:05 am IST

சென்னை மெரீனா கடற்கரையில் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த 9 வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடகம் மாநிலம் ராமநகரம் மாவட்டம் கொட்டிபுரா பகுதியைச் சோ்ந்த நசீா் பாஷா (52). இவா் தனது உறவினா்களுடன் தனியாா் பேருந்தில் சென்னையை சுற்றிப்பாா்க்க வந்துள்ளாா். இவா்கள் குடும்பமாக சனிக்கிழமை மாலை சென்னை மெரீனா பகுதியில் கடலில் விளையாடியுள்ளனா்.

அப்போது, நசீா் பாஷாவின் இரண்டாவது பேரன் முகமது உமா் (9), திடீரென கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட உறவினா்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை மீட்க முயன்றுள்ளனா். ஆனால், அவா்களால் சிறுவனை மீட்க முடியவில்லை.

இது குறித்து கடலோர மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த மீட்புப் படையினா் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், அவா்களாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.