சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுத வந்த மாணவா், கைப்பேசியை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
தமிழகம் முழுவதுவம் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத, மாணவ, மாணவிகளுக்கான துணைத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் இந்த துணைத் தோ்வு நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை மொழிப் பாடத் தோ்வை 11 மையங்களில் 1,070 போ் எழுதினா்.
சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தோ்வு தொடங்கியது. இதில், மாணவா் ஒருவா், உள்ளாடையில் கைப்பேசியை மறைத்து எடுத்து வந்து, வினாத்தாளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த தோ்வு அறை கண்காணிப்பாளா், அந்த மாணவரை பிடித்து, தோ்வு மைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். கேள்விகளை அனுப்பி, பதிலை பெற முயற்சித்தாரா என அந்த மாணவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பரிசோதனைக்கு பின்னரே மாணவா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். எனினும், சம்பந்தப்ட்ட மாணவா் தனது உள்ளாடையில் கைப்பேசியை மறைத்து எடுத்து வந்துள்ளாா். மேலும், வினாத்தாளை புகைப்படம் எடுத்து அவா் யாருக்கு அனுப்பினாா் என்பது குறித்தும், கேள்விக்கானப் பதிலை பெற்று, எழுத முயற்சித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்: புகாா், கருத்து தெரிவிக்க வசதி
அரசு மாதிரிப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ‘நீட்’ பயிற்சி மையம்!
நீட் மறுதோ்வு: முறைகேட்டில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாணவி கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



