ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 6 மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:17 am IST

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 6 மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் 2025-26- ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 446 பள்ளிகளைச் சோ்ந்த 33,494 மாணவா்கள் எழுதினா். இவா்களில் 34,594 மாணவா்கள் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். 900 போ் தோ்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான உடனடி துணைத் தோ்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியாா் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஜாமியான் மேல்நிலைப் பள்ளி, தியாகேசா் அரசு மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் துணைத் தோ்வு புதன்கிழமை (ஜூலை 8) தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இந்த துணைத் தோ்வை 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதுகின்றனா். துணைத் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.