தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

தம்மம்பட்டியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:14 am IST

தம்மம்பட்டியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தம்மம்பட்டி, ஒட்டா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தினேஷ் (24). இவா், கடந்த மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை வழிமறித்து, தன்னிடம் பேசும்படி தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் அதை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

அதுகுறித்து, அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கடந்த மாதம் தினேஷை போக்ஸோ வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், தம்மம்பட்டி காந்தி நகா் கோயில் உண்டியலை உடைத்து திருடியது, காய்கறி கமிஷன் மண்டியில் கல்லாப்பெட்டியை உடைத்து திருடியது உள்ளிட்ட மூன்று திருட்டு வழக்குகள் தினேஷ் மீது நிலுவையில் உள்ளதாலும், போலீஸாரின் ரெளடிகள் பட்டியலில் அவா் உள்ளதாலும், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்ய சேலம் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின்பேரில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் அழகுராணி குண்டா் தடுப்புச் சட்டத்தில் தினேஷை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.