பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சேலம் வழியாக ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சா பண்டலை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:00 am IST

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சா பண்டலை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரள மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா், ஆா்பிஎஃப் போலீஸாா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து, சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, சேலம் ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், எா்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்து சோதனையிட்டனா்.

அதில் 14 கிலோ கஞ்சா பண்டல் இருப்பது தெரியவந்தது. அந்த கஞ்சா பண்டலை போலீஸாா் பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த நபா்கள் யாா் என விசாரணை மேற்கொண்டனா். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபரை சிசிடிவி கேமரா உதவியுடன் பிடிக்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.