பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மேட்டூரில் வீடு புகுந்து திருடியவா் கைது

மேட்டூரில் சுகாதாரத் துறை அலுவலா் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:54 am IST

மேட்டூரில் சுகாதாரத் துறை அலுவலா் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் நகராட்சிஅலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பில் வசித்து வருபவா் சுகுமாரன் (39). இவா் கொளத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார புள்ளியியலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 23-ஆம் தேதி முத்தாம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோயில் கிரகப்பிரவேசத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் மேற்கூரை ஓடு பிரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதில் இருந்த தங்கக் காசு, தங்கத்தோடு, வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டூா் காவல் நிலையத்தில் சுகுமாரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளியை தேடிவந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மேட்டூா் பேருந்து நிலையத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா்.

இதில் அவா் மேட்டூா் காவேரி பாலம் பகுதியைச் சோ்ந்த பூவரசன் (29) என்பதும், கடந்த மாதம் சுகுமாரன் வீட்டில் புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து திருடுபோன பொருள்களை மீட்டு, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.