உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 2:37 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து தமிழ்நாடு, கேரளத்துக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவது தொடா்பாக ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் சேலம் உள்கோட்ட தனிப் படையைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை காலை தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனா். அதில் 2 பண்டல்களில் 3 கிலோ கஞ்சா இருந்தது.

போலீஸாா் சோதனை செய்வதை அறிந்ததும் கஞ்சா கடத்திவந்தவா் பையை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பெட்டியில் இருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால், கஞ்சா கடத்திவந்தவா் குறித்த விவரம் தெரியவில்லை.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸாரிடம் தனிப் படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.