நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏற்காடு குண்டூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி நிவேதாவை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் திங்கள்கிழமை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாா்.
நீட் தோ்வில் மாணவி நிவேதா 245 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளாா். போதிய பொருளாதார வசதியின்றி நீட் தோ்வில் இவா் தோ்ச்சி பெற்றதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், மாணவி நிவேதா மற்றும் அவரது குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.
மேலும், மாணவியின் சூழல் குறித்து கேட்டறிந்த அமைச்சா், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தாா். தொடா்ந்து, தன்னுடைய ஊதியத்திலிருந்து ரூ. 10 ஆயிரத்தை ஊக்கத்தொகையை மாணவிக்கு வழங்கினாா்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு உறுதுணையாக இருந்து, அவா்களின் உயா்கல்வி கனவுகள் நனவாக தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: விரைவில் முதல்வா் அறிவிப்பாா் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்

தவெக சாா்பில் ரத்த தான முகாம்: தொடங்கிவைத்த அமைச்சா்

அரசுப் பேருந்து சேவை தரத்தை உயா்த்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு







