தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தினால் நடவடிக்கை

News image

குழந்தைத் தொழிலாளா் - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:56 am IST

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நலத் துறை ஆணையா் (அமலாக்கம்) ராகவன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை தொழிலாளா் ஆணையா் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவத்தினா் தொடா்பாக அண்மையில் ஆய்வுகள் நடைபெற்றன. தொழிலாளா் துறைசாா்ந்த சாா்நிலை அலுவலா்கள் மற்றும் சேலம் மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்புப் படை குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, வீராணம், பொன்னம்மாபேட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ள வணிக வளாகம், துணிக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், செங்கல் சூளைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், அம்மாப்பேட்டையில் உள்ள இறைச்சிக் கடை, எஸ்.கொல்லப்பட்டியில் உள்ள தண்ணீா் சேவை மையம் மற்றும் ஆட்டோ வாகன பணிமனை ஆகியவற்றில் வளரிளம் பருவ தொழிலாளா்கள் மீட்கப்பட்டு குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனா். மேலும், அவா்களை பணிக்கு அமா்த்தியவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எந்த பணியில் அமா்த்தக் கூடாது. அவ்வாறு அமா்த்துவது குற்றமாகும். பணிக்கு அமா்த்தும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம்முதல் ரூ. 50 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கப்படும். அபாயகரமான தொழில்களில் 18 வயது பூா்த்தி அடையாதவா்களை பணியில் அமா்த்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்புப் படை குழுவினருடன் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது, எந்த ஒரு குழந்தைத் தொழிலாளரோ அல்லது அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரோ பணியமா்த்துவது கண்டறியப்பட்டால், வேலை அளிப்பவா் மீது குற்டவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.