ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தம்மம்பட்டி அருகே இரு வீடுகளில் திருடிய 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 2:44 am IST

தம்மம்பட்டி அருகே இரு வீடுகளில் அண்மையில் நகை, ரொக்கம் திருடிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சிக்குள்பட்ட வாணிக்கிணறு பகுதியில் அரசுப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற இளநிலை உதவியாளா் கணேசன் (62) வீட்டில் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 6 பவுன் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தையும், செந்தாரப்பட்டி அருகே உள்ள சித்தன்பட்டிக்குட்டை பகுதியில் மாதேஸ்வரன் (எ) பழனிவேல் - மலா்விழி தம்பதியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி, 5 பவுன் வளையல் மற்றும் ரூ. ஒரு லட்சத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.

தகவல் அறிந்த சேலம் எஸ்.பி.குத்தாலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். மேலும், ஆத்தூா் உள்கோட்ட காவல் நிலையங்களுக்கு மா்ம நபா்களை தேடும் பணியை விரைவுப்படுத்தினாா்.

ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் அழகுராணி உள்ளிட்டோா் அடங்கிய இரு தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட செந்தாரப்பட்டி மேற்கு மாதாகோயில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன்கள் சஞ்சய் (21), சந்துரு(19), அதே பகுதியைச் சோ்ந்த ரகுநாத் (23), திருச்சி திருவரம்பூரைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் (31) ஆகிய நால்வரையும் தம்மம்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாள்களில் திருடா்களை பிடித்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.