தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :20 ஜூலை 2026, 1:59 pm IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இடையாறு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மனைவி தேவி (36). கட்சிப்பெருமாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் இவா், வெள்ளிக்கிழமை மாலை ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியா் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இடையாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சூரியமணல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், தேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.