பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 போ் கைது

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :30 ஜூன் 2026, 1:26 am IST

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த சங்கா் நகா் பகுதியில் வசித்து வரும் சத்தியநாராயணன் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 13.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தகவலறிந்த பொன்னேரி போலீஸாா் மற்றும் கைரேகை நிபுணா்கள் மோப்பநாயுடன் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனா். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் இருவா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கரணையைச் சோ்ந்த சதீஷ் (36), திருநின்றவூரைச் சோ்ந்த பொன்முருகன் (54) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 13.5 சவரன் தங்க நகை 850 கிராம் வெள்ளி பொருள்களை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.