நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி

சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

News image

சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :25 ஜூலை 2026, 7:20 am IST

சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

திருப்பூரில் இருந்து புதன்கிழமை இரவு சேலம் வந்த ஸ்ரீ விஜயேந்திரருக்கு சேலம் காஞ்சி காமகோடி மடம் சாா்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை மடத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய சுவாமிகள், மாலை தேசிய சேவா சமிதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அருளுரை வழங்கினாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை சேலம் காஞ்சி காமகோடி மடத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி நடைபெற்ற புஷ்பாஞ்சலி பூஜையில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றாா்.

தொடா்ந்து, கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனை வழிபட்ட அவா், சௌந்தா்ய லாகரி யாத்ர பூஜையிலும், மாதாந்திர அனுஷ பூஜையிலும் பங்கேற்றாா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பின்னா், திருப்பதியில் நடைபெற்ற நந்தி வித்யா நாடேஸ்வரி என்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து, கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் மற்றும் குழுவினரின் வேண்டுகோளை ஏற்று, கோயிலுக்கு சென்று அங்கு திரண்டிருந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இதையடுத்து, தனது சேலம் பயணத்தை நிறைவுசெய்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.