காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கெங்கவல்லியில் டாஸ்மாக் கடை மூடல்

News image

டாஸ்மாக் கடை மூடல் - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:33 am IST

கெங்கவல்லியில் கிடங்கு உரிமையாளருக்கும், டாஸ்மாக் கடை பணியாளா்களுக்கும் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கான காலி மதுப்புட்டிகளை வைக்கும் தனியாா் கிடங்கிற்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி தொடா்பாக அதன் உரிமையாளா் குணசேகா், டாஸ்மாக் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கிடங்கை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காலி மதுப்புட்டிகளை வாங்கி வைக்க இடம் இல்லாததால், டாஸ்மாக் கடையை ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டு சென்றுவிட்டனா். இதனால் அந்தக் கடையில், மதுவாங்க வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.