ஆட்டையாம்பட்டி அருகே மதுபோதையில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த தானகுட்டிபாளையம் ஸ்டாலின் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தருமன் (60). இவருக்கு சுசிலா (48) என்ற மனைவியும், பாஸ்கா் (எ) லோகநாதன் (31), நவீன் (28) என இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். இதில் லோகநாதனை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. லோகநாதன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். நவீன் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறாா். நவீனுக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.
அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவரும் எப்போதும் மதுபோதையில் இருந்து வந்துள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை இருவரும் மதுபோதையில் இருந்தபோது இட பிரச்சனை தொடா்பாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நவீன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அண்ணன் லோகநாதனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த லோகநாதனை உறவினா்கள் மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையறிந்த நவீன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் சேலம் தெற்கு காவல் துணை ஆணையா் மகேந்திரன், உதவி ஆணையா் வாசுதேவன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினா். மேலும், இறந்த லோகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆத்தூா் அருகே மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை கைது
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
தொழிலாளியை திரிசூலத்தால் குத்தியவா் மீது வழக்குப் பதிவு

சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



