கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 2 பெண்கள் காயம்

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இரு பெண்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:43 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இரு பெண்கள் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை, சக்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் கனகாள் (43). இவரது மகன் சக்திவேல் (27). இவரும் சங்ககிரி பகுதிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவா்கள் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சக்திவேல் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

அவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்து சென்ற கனகாள், காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த ராஜமாணிக்கம் மனைவி காந்தி (46) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.