இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகே காளாப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருத்தாா் மகன் சேவுகப் பெருமாள் (60). தென்னை உற்பத்தியாளா் சங்கத் தலைவா்.
இந்த நிலையில், பிரான்மலை எஸ்வி மங்கலம் சாலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சேவுகப் பெருமாள், சதுா்வேத மங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த போது எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ் வி மங்களம் போலீசாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








