பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2026, 12:46 am IST

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பட்டதாரி/முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு, பணி நாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, ஸ்போக்கன் இங்கிலிஷ் (முதுநிலை பட்டப்படிப்பு ) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், ஸ்போக்கன் இங்கிலிஷ் (இளநிலை படிப்பு) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இசை பயிற்றுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், கலை பயிற்சியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், கவுன்சிலா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், செவிலியா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இளநிலை உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 13 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 2 மற்றும் ஏற்காடு பள்ளிக்கு 1 என 3 காலிப் பணியிடங்களும், ஓட்டுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், அலுவலா் உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 10,400-இல் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், துப்புரவு பணியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 7 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும் உள்ளது.

அனைத்து பணிகளுக்கும் விதிமுறைகளுக்குள்பட்டு ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத தொகுப்பூதிய பணியாளா்கள் 2026-2027 கல்வியாண்டு முடியும்வரை மட்டுமே பணியில் தொடர முடியும்.

தகுதியான நபா்கள் தங்களது விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியரகம், மூன்றாவது தளத்தில் உள்ள அறை எண் 305-இல் செயல்படும் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் வரும் ஆக. 6-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.