வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,80,000 சம்பளத்தில் ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணி!

ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணி - கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2026, 6:47 pm IST

ஓஎன்ஜிசி-ல் பொறியாளர் மற்றும் புவியியலாளர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் 73 சதவீதத்துக்கு அதிகமாகவும், எரிவாயு உற்பத்தியில் 57 சதவீதம் பங்களிக்கும் நாட்டின் மகாரத்னா எரிசக்தி நிறுவனம் ஓஎன்ஜிசி. உலகயளவில் 18 நாடுகளில் கிளைகள் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம், எதிர்காலத்திற்குத் தயாராகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நாளைய எரிசக்தியை வடிவமைக்க இயற்கை எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது.

மகாரத்னா எரிசக்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, இளம் பட்டதாரிகளுக்கு லட்சியம், புதுமை மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான ஒரு தொடக்கப் புள்ளியாகும். சுமார் 22,600 தொழில் வல்லுநர்களைக் கொண்ட ஒரு பன்முக சமூகத்தில் இணைந்து, முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாகவும், தேசத்திற்கு சேவை செய்யும் ஒரு மதிப்புமிக்க அமைப்பின் அங்கமாக விளங்குகிறது.

இந்த நிறுவனத்தில் திறமையான, ஆர்வமுள்ள புவியியலாளர்கள் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. பதவி, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த வாய்ப்புகளுடன், தொழில்துறையிலேயே சிறந்த சம்பளத்தையும் வழங்கி வருகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 2/2026 (R & P)

பணி: Engineer, Geologist (Level - E1)

காலியிடங்கள்: 52

சம்பளம்: மாதம் ரூ.60,000 -1,80,000

வயது வரம்பு: பொறியாளர் பணிக்கு 26-க்குள் இருக்க வேண்டும். புவியியலாளர் பணிக்கு 27-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி , முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், பெட்ரோலியம், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

புவியியலாளர்(Geology) பணிக்கு விண்ணப்பிப்போர் புவியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது பெட்ரோலியப் புவி-அறிவியல், பெட்ரோலியப் புவியியல் பாடப்பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் அல்லது புவியியல் தொழில்நுட்பம் பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஓஎன்ஜிசி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு தோராயமாக 6.9.2026-ல் நடை பெறும். தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Apply Now... ONGC Recruitment 2026 for Geologists and Engineers Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.