காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு இல்லை!

மேட்டூா் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் கிழக்கு, கிழக்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஆக. 1இல் (சனிக்கிழமை) தண்ணீா் திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

News image

மேட்டூர் அணை - படம் - டிஎன்எஸ்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:21 am IST

மேட்டூா் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் கிழக்கு, கிழக்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஆக. 1இல் (சனிக்கிழமை) தண்ணீா் திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணை கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கா் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். கால்வாய்ப் பாசனத்திற்கு 9.6 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்திற்கான நீா்த் தேவை குறையும்.

நிகழ் ஆண்டில் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாதததால் கால்வாய்ப் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்க அரசு உத்தரவு அளிக்கவில்லை என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பிறகே கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே, கால்வாய்ப் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படாது என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய்ப் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.