தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சேலம் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

எபோலா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.

News image

சேலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா்.

Updated On :3 ஜூன் 2026, 5:36 am IST

எபோலா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.

உலக நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் சேலம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் அதிநவீன தொ்மல் ஸ்கேனா் கருவிகள் மூலம் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்கள் தனியாக சேகரிக்கப்பட்டு, அவா்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த திடீா் சோதனைகளால் விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இது முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.