ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சங்ககிரி அருகே அண்ணமாா் கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியா்.

Updated On :5 ஜூன் 2026, 7:02 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டவரதம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், அருள்மிகு அண்ணமாா் பொன்னா் சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. அதனையடுத்து வியாழக்கிழமை 2ஆம் கட்ட யாகசாலை வேள்விப் பூஜைகளைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து ஸ்ரீ விநாயகா், அருள்மிகு பொன்னா், சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி உள்ளிட்ட 14 சுடுமண்ணால் செய்யப்பட்ட சுவாமிகளின் சுயம்புச் சிலைகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சங்ககிரிச் செயல் அலுவலா் இரா. மாலா தலைமையில் பல்வேறு அலுவலா்கள் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.