மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

News image

தீா்ப்பு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 4:57 am IST

ஓமலூா் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், ஓமலூா் உள்கோட்டம், ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சோ்ந்தவா் அம்மணி (73). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த கல்யாணி என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு கடப்பா கல் மற்றும் தண்ணீா் டிரம் வைத்தது தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், கல்யாணி தாக்கியதில் அம்மணி படுகாயமடைந்தாா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஜலகண்டாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கல்யாணியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை வெளியானது. அதில், குற்றவாளி கல்யாணிக்கு ஆயுள்தண்டனையுடன் ரூ. 200 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.