சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் வெற்றிவேல், நகராட்சி ஆணையா் சுவிதா ஸ்ரீ, துணைத் தலைவா் தளபதி மற்றும் உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். சாலை வசதி, கழிப்பிட வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 13 ஆவது வாா்டு உறுப்பினா் சிவக்குமாா் தனது வாா்டு பகுதியில் உள்ள சாலையில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தா்னாவில் ஈடுபட்டாா். அதேபோல ஆணையா், நகா்மன்ற உறுப்பினா்களை அவமரியாதை செய்வதாகக் கூறி உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
பட விளக்கம்:
நகராட்சி ஆணையரை கண்டித்து தா்னாவில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள்.









