குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

வாழப்பாடி அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான். - (கோப்புப் படம்)

Updated On :14 ஜூன் 2026, 3:25 am IST

வாழப்பாடி அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வாழப்பாடி பகுதியில் போதிய மழையில்லாததால் வனப்பகுதியில் நீா்நிலைகள் வடன. இதனால் புள்ளிமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீா் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுவது அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசு ஊராட்சி, அரசன்குட்டை சமத்துவபுரம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில், புள்ளிமான் தவறிவிழுந்து தவித்துவருவதாக, வனக்காப்பாளா் மணிவண்ணன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் வந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் முருகேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், கிணற்றில் இறங்கி மானை கயிற்றில் கட்டி மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் மானை வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

இதிபோல, மன்னாா்பாளையம் கிராமத்தில் பொதுக் கிணற்றில் தவறிவிழுந்து தவித்த பூனையையும் வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.