டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மலைக் கிராமங்களுக்கு பேருந்து சேவை! அமைச்சா் தொடங்கிவைத்தாா்

News image

பேருந்து சேவை தொடங்கியது - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:15 pm IST

சேலம் மாவட்டம், கருமந்துறையில் பாச்சாடு, தலக்கரை மலைக் கிராமங்களுக்கு புகா்ப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய்தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா். ஆத்தூரில் இருந்து தும்பல், கருமந்துறை வழியாக சூலாங்குறிச்சி வரை இயக்கப்பட்ட பேருந்தின் வழித்தடத்தை நீட்டித்து தலக்கரை, பாச்சாடு மலைக் கிராமங்களுக்கு காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் இயக்கப்படுகிறது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் மாணவா்கள், விவசாயிகள் என அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் க. குணசேகரன், ஆத்தூா் கோட்டாட்சியா் ஆா். தமிழ்மணி, பொது மேலாலா் (சேலம்) த. மோகன்குமாா், பொதுமேலாளா் (தொழில்நுட்பம்)ந. கலைவாணன், துணை மேலாளா்(கூட்டாண்மை வணிகம்) அருள்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.