ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இருசக்கர வாகன திருட்டு: 2 சிறுவா்கள் கைது

எடப்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:01 am IST

எடப்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே கடந்த 11-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த மொபட் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினா்.

இதில் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவனும், அவரது நண்பரான நைனாம்பட்டி பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனும் சோ்ந்து மொபட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவா்களிடம் இருந்து மொபட்டை மீட்ட போலீஸாா், அவா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.