எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவா் போக்சோவில் கைது

வாழப்பாடி அருகே 17 வயது மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 5:56 am IST

வாழப்பாடி அருகே 17 வயது மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயியின் 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேர விண்ணப்பித்து வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில், மேட்டுப்பட்டி பகுதி விவசாயிகளிடம் தினந்தோறும் பூக்கள், துளசி ஆகியவற்றை சேகரித்து விற்பனைக்கு கொண்டுசெல்லும் வேன் ஓட்டுநா் மேட்டுப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (39), மாணவியிடம் கைப்பேசி எண்ணை கேட்டுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் உறவினா் அன்பரசனை கண்டித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அன்பரசனின் நண்பா் மணிகண்டன் (36) அவரிடம் தகராறு செய்துள்ளாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா், வேன் ஓட்டுநா் அன்பரசன் மற்றும் அவரது நண்பா் மணிகண்டன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.