சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பள்ளிக்கு வேனில் சென்ற மூன்றாம் வகுப்பு மாணவி, அதே வேனின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
ஏற்காடு, வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மகள் மேனகா (8). இவா், முண்டகம்பாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வாழவந்தி ஊராட்சிக்கு உள்பட்ட கே.புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெத்தமணியன் மகன் ரங்கநாதன் (42) ஓட்டிச்செல்லும் வேனில் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.
இந்த வேன் ஓட்டுநா் ரங்கநாதன் ஏற்காடு லேடிசீட் பகுதி சாலையில் குழந்தைகளை இறக்கிவிடுவாா். அந்தக் குழந்தைகள் மறுவேனில் ஏறி முண்டகம்பாடி பள்ளிக்குச் செல்வது வழக்கம். அதேபோல வெள்ளிக்கிழமை குழந்தைகளை லேடிசீட் பகுதியில் இறக்கிவிட்டுள்ளாா். அப்போது, மாணவி மேனகா வேன் பின்னால் நிற்பதை கவனிக்காமல் ஓட்டுநா் ரங்கநாதன் வேனை பின்னோக்கி இயக்கியுள்ளாா். இதில் வேனின் பின்சக்கரத்தில் சிக்கி மாணவி மேனகா உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுநா் ரங்கநாதனை கைது செய்தனா். மேலும், இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









