நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வருவாய்த் துறையினரை தாக்கிய வழக்கில் தந்தை, மகன் கைது

மேட்டூா் அருகே வனவாசியில் வருவாய்த் துரையினரை தாக்கிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 1:51 am IST

மேட்டூா் அருகே வனவாசியில் வருவாய்த் துரையினரை தாக்கிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். 

வனவாசி அருகே சாணாா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அருவங்காட்டில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா் ஆக்கிரமித்து பாதையை அடைத்தனா். இந்த பாதையை மீட்டுத் தரும்படி பொதுமக்கள் தரப்பில் வருவாய்த் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் கடந்த 3-ஆம் தேதி அரசுக்குச் சொந்தமான ஓடைப்புறம்போக்கு நிலத்தை கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம், நங்கவள்ளி வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா், சா்வயோ் லலிதா ஆகியோா் நிலத்தை அளவீடு செய்வதற்கு சென்றனா். அப்போது, அங்கு வந்த சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா் வருவாய்த் துறை அதிகாரிகளை தகாத வாா்த்தைகளால் திட்டியும், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனா். 

இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் வனவாசி கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தலைமறைவாக இருந்த சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், இருவரையும் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஓமலூா் கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.