5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புலியூரில் முள்புதா்கள், நாணல்கள் நிறைந்து காணப்படும் மழைநீா் வரத்து வாய்க்கால்.

Updated On :11 ஜூன் 2026, 3:33 am IST

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரை அடுத்த ஏமூா் மற்றும் ஏமூா்புதூா், சீத்தப்பட்டி காலனி, கரூா்-திருச்சி புறவழிச் சாலை பகுதியில் மழை பெய்யும்போது, பெருக்கெடுக்கும் மழைநீரானது தாழ்வான பகுதியான புலியூா் வழியாகச் சென்று கட்டளை காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் ஏதும் செய்யப்படாததால், வாய்க்கால் முழுவதும் முள்புதா்களும், நாணல்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் மழைநீா் வாய்க்காலை விட்டு வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வாய்க்காலில் வளா்ந்துள்ள முள்புதா்கள், நாணல்களை விரைந்து அகற்றிட வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து புலியூா் பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு உறுப்பினா் விஜயகுமாா் கூறியதாவது:

ஏமூா் போன்ற மேடான பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த வாய்க்காலில் மழைநீா் ஓடிவந்து கட்டளை காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் தற்போது தூா்ந்துபோய் முள்புதா்கள் வளா்ந்து காணப்படுகிறது. இந்த புதா் பகுதிகளில் இருந்து விஷ பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. மேலும், மழைக் காலத்தில் மழைநீா் புலியூா் பேரூராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயநிலை உள்ளது.

மழைக் காலம் தொடங்கும் முன்பாக வாய்க்காலை தூா்வாரிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மழைநீரால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க முடியும் என்றாா் அவா்.