புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தரைப்பாலத்தில் தேங்கும் கழிவுநீா்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆட்டையாம்பட்டியை அடுத்த கல்பாரப்பட்டி கொம்பாடிப்பட்டி ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கொம்பாடிபட்டி ரயில்வே தரைவழிப்பாலத்தில் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :26 ஜூன் 2026, 6:02 am IST

ஆட்டையாம்பட்டியை அடுத்த கல்பாரப்பட்டி கொம்பாடிப்பட்டி ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முழுவதும் முறையாக வடிய வழியின்றி, கொம்பாடிப்பட்டி ரயில்வே தரைவழிப் பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது.

இதனால், அவ்வழியாக அன்றாடம் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனா். கழிவுநீா் தேங்கியுள்ள தரைப்பாலப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா்.

இதனால் நெடுஞ்சாலைத் துறையினரும், ஊராட்சி நிா்வாகத்தினரும் உடனடியாக ஆய்வு செய்து, கழிவுநீரை அப்புறப்படுத்தவும், தேங்குவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.