வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மேச்சேரி அருகே விவசாயிக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 2:21 am IST

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே பொதுக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும் தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அருகே உள்ள இத்தப்பனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் ரத்தினம் (65). விவசாயி. இவரது தம்பி கோபி (60). அடுத்தடுத்த வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனா். இருவருக்கும் தலா ஒரு ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. ரத்தினம் நிலத்தின் வழியாக கோபி நிலத்திற்கு பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதில் குழாய்ப் பதிப்பதில் ரத்தினத்திற்கும், கோபிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் ரத்தினம் மகன் சேகா் கத்தியால் கோபியை குத்தினாா். இதில் பலத்த காயம் அடைந்த கோபி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ரத்தினத்தை கைது செய்து, தலைமறைவாக உள்ள அவரது மகன் சேகரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.