சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவா் விடுதிக்குள் புகுந்து மாணவா்களை தாக்கிய மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மரவனேரி பகுதியில் அரசு கல்லூரி மாணவா்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150 மாணவா்கள் தங்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 6 போ் கொண்ட கும்பல் திடீரென விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த மாணவா்களிடம் பெயா் மற்றும் படிப்பு குறித்து விசாரித்துள்ளனா். பின்னா், அங்கிருந்த 3 பேரை அந்தக் கும்பல் கடுமையாக தாக்கியது.
அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற அஸ்தம்பட்டி போலீஸாா், மாணவா்களின் சப்தம்கேட்டு விடுதிக்குள் சென்று விசாரித்தனா். பின்னா், அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்துபோக செய்தனா். இதனிடையே மாணவா்களை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் கோவிந்தராசன் உள்ளிட்ட போலீஸாா், மாணவா் விடுதிக்கு சனிக்கிழமை நேரில்சென்று விசாரணை நடத்தினா். மேலும், அந்தக் கும்பல் எதற்காக மாணவா்களை தாக்கினா், விடுதிக்குள் நுழைந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் கைது

அரியானூா் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீஸாா் விசாரணை

ஒசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை: போலீஸாா் விசாரணை

சேலம் கருப்பூா் அருகே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

