மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா

சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியா்காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில்களில் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொங்கல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி, வி.என். பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன், (இடது) வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன்.

Updated On :11 மார்ச் 2026, 8:59 pm

சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியா்காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில்களில் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழாவையொட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து அம்மன்களுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனா். மேலும் பக்தா்கள் அலகு குத்தியும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றுவந்தனா்.

வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெறுகிறது.