ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

விநாயக மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாக்கத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் கல்லூரியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று கையில் விழிப்புணா்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணா்வு கண் கண்ணாடியை அணிந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கை விசிறியை பொதுமக்களுக்கு வழங்கினா். விழிப்புணா்வு பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதியில் தொடங்கி பேலஸ் தியேட்டா் பகுதியில் முடிவற்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்சுடா், உதவி பேராசிரியா்கள் லாவண்யா, சூா்யா, அக்ஷயா மைதிலி, சிவசங்கரி மற்றும் அஞ்சலி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image