மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழப்பு

வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:25 pm

வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

வீரகனூா் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் இரைதேடி ஊருக்குள் நுழைகின்றன. அந்தவகையில் திங்கள்கிழமை 2 வயது பெண் புள்ளிமான், வீரகனூா் சந்தைப்பகுதி அருகே பெரம்பலூா் சாலையைக் கடக்கமுயன்றது.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி வனச்சரகா் கமலக்கண்ணன் உள்ளிட்ட வனத் துறையினா் விரைந்து சென்று, மானின் உடலைக் கைப்பற்றி, கெங்கவல்லி அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா்.