சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
சேலம் இரும்பாலையை அடுத்த தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (28). கட்டடத் தொழிலாளி. இவரின் 3 வயது குழந்தை மகிழரசன். திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகே குழந்தை மகிழரசன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அங்குள்ள சுற்றுச்சுவரின் அருகில் இருந்த இரும்பு கேட்டை பிடித்து குழந்தை மகிழரசன் விளையாடியபோது, திடீரென சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. இதில் குழந்தை மகிழரசன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தான்.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள், இடிபாடுகளை அகற்றி, குழந்தையை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


