சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :17 மே 2026, 2:27 am IST

சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வண்டியூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் அருண்குமாா் (28). இவா், சேலம் நரசோதிப்பட்டியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அவா் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தாா்.

இதில் விரக்தியடைந்த அருண்குமாா், நரசோதிப்பட்டியில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா், வீட்டுக்குள் சென்று பாா்த்தனா்.

அப்போது வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமாா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.